குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மால்வியா நகர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

प्रविष्टि तिथि: 03 JUN 2026 3:03PM by PIB Chennai

தில்லி, மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர், இந்தத் துயரமான தருணத்தில், அவர்களது குடும்பத்தினர் மன வலிமையும், தைரியத்தையும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நலமுடன் இருக்கவும், அவர்கள் விரைவில் பூரண குணமடையவும்   இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Release ID: 2268327

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2268613) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Malayalam