இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு டிஜிட்டல் சூழலியலின் கீழ் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களை விளையாட்டு அமைச்சகம் பணியமர்த்த உள்ளது
प्रविष्टि तिथि:
28 MAY 2026 1:11PM by PIB Chennai
இந்தியாவின் விளையாட்டு நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகள் (என்எஸ்எஃப்) முழுவதும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், இந்திய விளையாட்டு ஆணையமும், தேசிய விளையாட்டு டிஜிட்டல் சூழலியலின் பரந்த கட்டமைப்பின் கீழ், பிரத்யேக என்எஸ்எஃப் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களைப் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளன.
இந்த முன்முயற்சி குறித்துப் பேசிய மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, "2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்தியாவின் நீண்டகால ஒலிம்பிக் லட்சியங்களுக்கு முன்னதாக, ஒரு வலுவான விளையாட்டுச் சூழலை உருவாக்க இந்தியா தயாராகி வரும் நிலையில், கூட்டமைப்பு சார்ந்த டிஜிட்டல் அமைப்புகளைச் சீரமைப்பதையும், போட்டிகள், தேசிய பயிற்சி முகாம்கள், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பு, நிர்வாகச் செயல்முறைகள், நிகழ்நேர ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான திட்டமிடலை மேலும் திறம்படச் செயல்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு ஆணையம் ஆகியவை, வருடாந்திர புதுப்பித்தல் தளம், பயிற்சி மற்றும் போட்டிக்கான வருடாந்திர நாட்காட்டி, விளையாட்டு மேலாண்மை அமைப்புமுறை, பெண்களுக்கான விளையாட்டுத் தளம், தேசிய விளையாட்டுத் தரவுக் களஞ்சிய அமைப்புமுறை மற்றும் வரவிருக்கும் டிஜிலாக்கர் ஒருங்கிணைப்புகள் போன்ற தளங்கள் மூலம், என்எஸ்எஃப் செயல்பாட்டு இடைமுகங்களை படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266171®=3&lang=1
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2268224)
आगंतुक पटल : 31