வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொத்த விலை குறியீட்டெண்ணின் அடிப்படை ஆண்டு 2011–12-லிருந்து 2022–23 ஆக மாற்றம்

प्रविष्टि तिथि: 02 JUN 2026 4:05PM by PIB Chennai

மொத்த விலை குறியீட்டெண்ணின் அடிப்படை ஆண்டை 2011-12-லிருந்து 2022-23 ஆக மாற்றுவதற்கும், புதிய தயாரிப்பாளர் விலை குறியீட்டெண்களைத் தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய மொத்த விலை குறியீட்டெண் தொடர் 2026 ஜூன் 15 அன்று வெளியாகும்.

 

சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, பயனர்கள் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண்ணிற்கு மாறுவதற்கு ஏதுவாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு குறியீட்டெண்களும் ஒன்றாக வெளியிடப்பட்டு, பின்னர் மொத்த விலை குறியீட்டெண் நிறுத்தப்படும்.

 

புதிய தொடரின் முக்கிய சிறப்பம்சங்கள்:

 

* கூடுதல் பொருட்கள்: குறியீட்டெண்ணில் உள்ள மொத்த பொருட்களின் எண்ணிக்கை 697-லிருந்து 957 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

* புதுப்பிக்கத்தக்க எரிசக்தி:மின்சாரப் பிரிவின் கீழ் சூரியசக்தி, காற்றாலை மற்றும் அணுமின்சாரம் முதல்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

 

* பிரிவு மாற்றம்: கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை 'எரிபொருள் மற்றும் மின்சாரம்' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

 

* மேம்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறை: எடைகளைக் கணக்கிட 'மொத்த உற்பத்தி மதிப்பு' பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இதே நாளில் வங்கி, காப்பீடு, ரயில்வே, தொலைத்தொடர்பு உள்ளிட்ட ஏழு முக்கியச் சேவைகளுக்கான சேவைத் தயாரிப்பாளர் விலை குறியீட்டெண்ணும் வெளியிடப்படவுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267963&reg=3&lang=1

Release ID: 2267963

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2268162) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Kannada