எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மின்சார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUN 2026 4:16PM by PIB Chennai

மத்திய மின்சார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது. 'மின்விநியோகக் கட்டமைப்பு நிலைத்தன்மை' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மத்திய மின்சாரத் துறை அமைச்சர் திரு. மனோகர் லால் தலைமை தாங்கினார். மின்சாரத் துறை இணை அமைச்சர் திரு. ஸ்ரீபாத் யசோ நாயக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மின்சாரத் துறை சார்ந்த நிறுவனங்களின்  பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

 

இந்தியாவின் அதிகரித்து வரும் மின்சாரத் தேவை மற்றும் பெருமளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணைப்பைக் கருத்தில் கொண்டு, மின்விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 50 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திறனை இணைத்த வரலாற்றுச் சாதனைக்காகவும், நம்பகமான மின்விநியோகக் கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் குழுவினருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

 

மின்விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்:

 

ஒத்திசைவான கட்டமைப்பு: மின்சாரம் வீணாவதைத் தடுக்க, மின்விநியோக இணைப்புக் கிரிட் அமைப்பதற்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கும் இடையே காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்தல்.

 

சேமிப்புத் திட்டங்கள்:நீண்ட கால மின் சேமிப்பை உறுதி செய்ய நீரேற்று மின் சேமிப்புத் திட்டங்களை ஊக்குவித்தல்.

 

தொழில்நுட்பத் தரம்: பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் தரவு மைய சுமை போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கான தரங்களை அவ்வப்போது மறுஆய்வு செய்தல்.

 

துல்லியமான கணிப்பு: தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவுவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியைத் துல்லியமாகக் கணித்தல்.

 

 பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்தல்.

 

தூய்மையான மற்றும் பாதுகாப்பான இந்திய மின்விநியோகக் கட்டமைப்பை நோக்கி ஒருங்கிணைந்து செயல்படுவதென்ற உறுதியுடன் இக்கூட்டம் நிறைவடைந்தது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267971&reg=3&lang=1

Release ID: 2267971

****

TV/EA/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2268149) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati