மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மேகாலயா மாணவர் பிரதிநிதிகளுடன் தெலங்கானா ஆளுநர் உரையாடினார்
प्रविष्टि तिथि:
02 JUN 2026 12:24PM by PIB Chennai
தெலங்கானா ஆளுநர் திரு பிரதாப் சுக்லா ஐதராபாத் லோக்பவனில் 2026 மே 28 அன்று மேகாலயா மாணவர் பிரதிநிதிகளுடன் உரையாடினார்.
ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் மாணவர் பிரதிநிதிகள் இளையோர் சங்கமத்தின் கல்வி, கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக தெலங்கானாவில் பயணம் மேற்கொண்டனர். இளைஞர்களிடையே தேசிய ஒருங்கிணைப்பு, பல்வேறு கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் அமைந்தது.
இந்த சந்திப்பின் போது தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, கலாச்சாரப் புரிந்துணர்வை மேம்படுத்துவது, நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பது ஆகியவற்றில் இளைஞர்களின் முக்கியப் பங்களிப்பை ஆளுநர் எடுத்துரைத்தார். அப்போது தங்கள் பயணத்தின் அனுபவங்களை மாணவர் பிரதிநிதிகள் ஆளுநரிடம் எடுத்துரைத்தனர்.
இந்தப் பயணத்தின் போது ஹுசைன் சாகர் ஏரி, சமத்துவ சிலை, ராமப்பா கோவில், வாரங்கல் கோட்டை, பத்ரகாளி கோவில், ஆயிரம் தூண் கோவில் போன்ற தெலங்கானாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார கல்வி மையங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267817®=3&lang=1
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2268005)
आगंतुक पटल : 8