பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனித டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2026 10:33AM by PIB Chennai

புனித டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் ஜெயந்தி தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.04.2026) அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். கருணை,  பணிவு, சமூகத்தின் மீதான  இணையற்ற சேவை ஆகியவற்றின் கூட்டு உருவமாக அவர் திகழ்கிறார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். தமது வாழ்க்கையை மற்றவர்களின் உயர்வுக்காக அர்ப்பணித்ததன் மூலம் உண்மையான சிறப்பம்சம் மற்றவர்களுக்கு உதவுவதில் உள்ளதாக அவர் விளக்கியுள்ளார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். கல்வி, சமூக நலன், ஆன்மீகம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய மகத்துவமான பங்களிப்புகள் சமூகத்தில் நீடித்த முத்திரையாகும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். தற்போதும் கூட அவரின் வாழ்க்கை, தன்னலமற்ற சேவை பாதையில் செல்ல எண்ணற்ற தனிநபர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உத்வேகம் அளிக்கிறது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“புனித டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவகுமார சுவாமிகளின் ஜெயந்தியையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். கருணை,  பணிவு, சமூகத்தின் மீதான  இணையற்ற சேவை ஆகியவற்றின் கூட்டு உருவமாக அவர் திகழ்கிறார். தமது வாழ்க்கையை மற்றவர்களின் உயர்வுக்காக அர்ப்பணித்ததன் மூலம் உண்மையான சிறப்பம்சம் மற்றவர்களுக்கு உதவுவதில் உள்ளதாக அவர் விளக்கியுள்ளார். கல்வி, சமூக நலன், ஆன்மீகம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய மகத்துவமான பங்களிப்புகள் சமூகத்தில் நீடித்த முத்திரையாகும். தற்போதும் கூட அவரின் வாழ்க்கை தொடர்ந்து, தன்னலமற்ற சேவை பாதையில் செல்ல எண்ணற்ற தனிநபர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உத்வேகம் அளிக்கிறது.

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2267977) வருகையாளர் எண்ணிக்கை : 22