தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் ஓராண்டுக்குள் 53 மகப்பேறு இறப்புகள் ஏற்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது
प्रविष्टि तिथि:
02 JUN 2026 11:21AM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை ஓராண்டுக்குள் 53 மகப்பேறு இறப்புகள் ஏற்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. விழிப்புணர்வு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஊடகங்களில் வெளியான இச்செய்தி உண்மையானால் அது மனித உரிமைகளை மீறக் கூடியதாகும். இதையடுத்து இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்தியப்பிரதேச தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2026 மே 29 அன்று ஊடகங்களில் வெளியான தகவலின்படி, 53 மகப்பேறு இறப்புகளில், உயிரிழந்தவர்களின் சராசரி வயது 26 என்று கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மாவட்ட மருத்துவமனை, முதன்மை சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் ஆகியவற்றில் மருத்துவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் உட்பட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267786®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2267892)
आगंतुक पटल : 52