ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு ரூ.10,021 கோடி மதிப்பிலான நிதியை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் விடுவித்தார்

प्रविष्टि तिथि: 28 MAY 2026 5:00PM by PIB Chennai

மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் ஒரு மைல்கல் நடவடிக்கையாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி முன்னிலையில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் காணொலிக் காட்சி மூலம், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட  12 மாநிலங்களுக்கு ரூ.10,021.42 கோடி மதிப்பிலான முதன்மை நிதி ஒதுக்கீட்டை வெளியிட்டார். அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இந்த நிதியைப் பெற்றன.

ஏழைக் குடும்பங்களுக்கு நிலம் இல்லாத சந்தர்ப்பங்களில் வீட்டு கட்டுமானம் பாதிக்கப்படுகிறது என்று திரு சவுகான் தெரிவித்தார். அத்தகைய பயனாளிகளுக்கு நிலம் வழங்கவும், தேவையான ஆதரவை உறுதி செய்யவும் மாநிலங்கள் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நிலுவையில் உள்ள குறைகளை உரிய நேரத்தில் தீர்ப்பதையும், கட்டுமானத்தில் உள்ள வீடுகளின் பணிகளை விரைவுபடுத்துவதையும், அனுமதிக்கப்பட்ட நிதியை உடனடியாகப் பயன்படுத்துவதையும் மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சில மாநிலங்கள் தங்களின் 2024-25 மற்றும் 2025-26 இலக்குகளுக்கு ஏற்ப ஒப்புதல்களை இன்னும் முடிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், 2026 ஜூன் 30-க்குள் அந்தச் செயல்முறையை முடிக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266262&reg=3&lang=1   

***


(रिलीज़ आईडी: 2267807) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada