மக்களவை செயலகம்
ஜனநாயக உணர்வை வலுப்படுத்த நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாப்பது அவசியம்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
प्रविष्टि तिथि:
28 MAY 2026 5:10PM by PIB Chennai
இந்தியாவின் ஜனநாயகம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது என மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். புது தில்லியில் உள்ள தில்லி சட்டப்பேரவை வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய சட்டப்பேரவையின் (1924-1930) விவாதங்களை கொண்ட தொகுப்புகள், 'விதான்-சேத்னா' காலாண்டு இதழின் முதல் பதிப்பு ஆகியவற்றை அவர் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், வருங்கால சந்ததியினரிடையே ஜனநாயக உணர்வை வலுப்படுத்த இந்தியாவின் நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாப்பது அவசியம் என்றார். தில்லி சட்டப்பேரவை வளாகம் இந்தியாவின் ஜனநாயக உணர்வு, நாடாளுமன்ற மரபுகள், சுதந்திரப் போராட்டத்தின் வாழும் அடையாளமாகத் திகழ்கிறது. மத்திய சட்டப்பேரவையின் முதல் இந்தியத் தலைவரான திரு. விதல்பாய் படேலின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த அவர், நாடாளுமன்ற மாண்பு, நடுநிலைமை ஆகியவற்றிற்கு அவர் வலுவான அடித்தளம் அமைத்ததாகக் குறிப்பிட்டார்.
உண்மைகள், தர்க்கத்தின் அடிப்படையிலான விவாதங்கள் மட்டுமே ஜனநாயக நிறுவனங்களின் மாண்பைப் பாதுகாக்கும். கொள்கை உருவாக்கம், சட்ட ஆராய்ச்சியை மிகவும் வெளிப்படையானதாக மாற்ற செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்கு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஆய்வுகள், ஜனநாயக விழிப்புணர்வை மேம்படுத்த 'விதான்-சேத்னா' இதழ் ஒரு முக்கிய அறிவுசார் முயற்சியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, தில்லி சட்டப்பேரவைத் தலைவர் திரு விஜேந்தர் குப்தா, தில்லி அமைச்சர் திரு பர்வேஷ் சாஹிப் சிங், துணை சபாநாயகர் திரு மோகன் சிங் பிஷ்ட் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266264®=3&lang=1
***
(Release ID: 2266264)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2267549)
आगंतुक पटल : 26