திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
ஆர்ஸெலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா பிஎம்- சேது திட்டத்தின் கீழ் முதல் முறையாக முதலீட்டுக்கு ஒப்புதல் பெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2026 1:40PM by PIB Chennai
பிரதமரின் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாற்றம் மூலம் மேம்படுத்தப்பட்ட ஐடிஐ (பிஎம்-சேது) திட்டத்தின் கீழ் ஒரு மைல்கல் வளர்ச்சியில், ஆந்திராவில் விசாகப்பட்டினம் ஐடிஐ கிளஸ்டருக்கான முதலீட்டுத் திட்டத்திற்கு (எஸ்ஐபி) தேசிய வழிநடத்தல் குழு (என்எஸ்சி) ஒப்புதல் அளித்துள்ளது, இது ஆர்ஸெலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா (ஏஎம்/என்எஸ் இந்தியா) மற்றும் அவர்களின் கல்வி கூட்டாளர் நியூ ஏஜ் மேக்கர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (நாம்டெக்) நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் முதலீட்டுத் திட்டத்தைக் குறிக்கிறது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் தொழில்துறை கூட்டாண்மையை செயல்படுத்திய முதல் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் திகழ்கிறது.
புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் கூட்டப்பட்ட 3 வது தேசிய வழிநடத்தல் குழு கூட்டத்தின் போது இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மைல்கல் மாநில அரசுகள் மற்றும் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கிடையேயான ஆழமான கூட்டாண்மை மூலம் அரசு ஐடிஐகளை தொழில்துறை நிர்வகிக்கும், விளைவு சார்ந்த நிறுவனங்களாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவதற்கான முதல் உறுதியான படியைக் குறிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266939®=3&lang=1
***
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267113)
வருகையாளர் எண்ணிக்கை : 8