சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம் தேசிய குடும்ப நல ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 3:55PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய குடும்ப நல ஆய்வு (என்எஃப்ஹெச்எஸ்) – 6-ஐ வெளியிட்டது. இந்த என்எஃப்ஹெச்எஸ்-6 ஆய்வானது, மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தை ஒருங்கிணைப்பு முகமையாகக் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகத்தால் 2023-24-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, மக்கள்தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து, குடும்ப நலக் குறியீடுள் குறித்த முக்கிய ஆதாரங்களை வழங்குவதோடு, மாவட்ட அளவில் ஆதார அடிப்படையிலான திட்டமிடல், செயலாக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கிறது.
என்எஃப்ஹெச்எஸ்-6- ன் முக்கிய அம்சங்கள்:
* 95.9% கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பைப் பெற்றுள்ளனர்.
* மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 88.6%-லிருந்து 90.6%-ஆக அதிகரித்துள்ளன. இது இந்தியாவை அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை நோக்கி மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது.
* பச்சிளம் குழந்தைகளுக்கான பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு 79.1%-லிருந்து 85.3%-ஆக மேம்பட்டுள்ளது.
* கர்ப்ப காலத்தில் 100 நாட்கள் அல்லது அதற்கு மேல் இரும்புச்சத்து ஃபோலிக் அமிலச் சத்து மாத்திரைகளை உட்கொண்ட தாய்மார்களின் எண்ணிக்கை 44.1%-லிருந்து 54.9%-ஆக அதிகரித்துள்ளது.
* அனைவருக்கும் தடுப்பூசி இலக்கை அடைவதில் இந்தியா தொடர்ந்து வலுவான முன்னேற்றம் கண்டு வருகிறது. தடுப்பூசி அட்டைகளின் அடிப்படையில், 12 முதல் 23 மாத குழந்தைகளிடையே முழுமையான தடுப்பூசி செலுத்தும் விகிதம் 83.8%-லிருந்து 87.1% ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இந்தியாவின் சீரான முன்னேற்றத்தை இந்த ஆய்வு முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
என்எஃப்ஹெச்எஸ்-6-ஐ இந்த இணைய தள இணைப்பில் பெறலாம்: https://master-mohfw-dohfw.digifootprint.gov.in/documents/publications?page=1
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266600®=3&lang=1
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266774)
வருகையாளர் எண்ணிக்கை : 17