எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயில் நிறுவனத்தின் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பின் கீழ் 'நவீன டிஜிட்டல் வகுப்பறைகளை' அமைக்க எட்சில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 12:59PM by PIB Chennai

மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை எஃகு உற்பத்தி நிறுவனமான 'இந்திய எஃகு ஆணையம்', மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எட்சில் (இந்தியா) நிறுவனத்துடன் இணைந்து, செயில் நிறுவனத்தின் 'பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு முன்னெடுப்பின் கீழ், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 2026 மே 26 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், செயில் நிறுவனத்தின் செயல்பாட்டுப் பகுதிகளைச் சுற்றியுள்ள பள்ளிகளில் 'நவீன டிஜிட்டல் வகுப்பறைகள்' நிறுவப்படவுள்ளன.

இந்தக் கூட்டு முயற்சி, அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்துவதையும், கற்றல் நடைமுறைகளை, செழுமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம், 'தேசியக் கல்விக் கொள்கை 2020' -ன் நோக்கங்களுடனும், ஐக்கிய நாடுகள் சபையின் 'நீடுத்த வளர்ச்சிக்கான இலக்கு - 4' உடன் ஒத்த வகையில் உள்ளது. இந்த இலக்குகள், அனைவரும் உள்ளடக்கிய, சமத்துவ, தரமான கல்வி மற்றும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளன.

செயில் நிறுவனத்தின் இயக்குநர் (பணியாளர் பிரிவு) திரு. கே. கே. சிங்  முன்னிலையில், செயில் மற்றும் எட்சில் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில், இவ்விரு நிறுவனங்களைச் சேர்ந்த பிற உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266164&reg=3&lang=1

 

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266381) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी