சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026–27-ம் நிதியாண்டிற்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் உத்தேசப் பட்டியலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறுதி செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 2:20PM by PIB Chennai

செயல்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைச் சொத்துக்களிலிருந்து வருவாய் ஈட்டும் நோக்கில், 2026–27-ம் நிதியாண்டில், 'சுங்கச்சாவடி-இயக்கம்-பரிமாற்றம்' மற்றும் 'உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை' ஆகிய வழிமுறைகளின் கீழ், பணமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைப் பிரிவுகளின் உத்தேசப் பட்டியலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இறுதி செய்துள்ளது. இருப்பினும், 2026–27-ம் நிதியாண்டில் 'ராஜ்மார்க் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை' வாயிலாகப் பணமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

செயல்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைச் சொத்துக்களைப் பயன்படுத்தி, கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டிற்கான மூலதனத்தைத் திரட்டுதல், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட, மத்திய அரசின் 'சொத்து பணமாக்கல் உத்தி'யின் ஒரு பகுதியாகவே இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது. இது முதலீட்டாளர்கள் மற்றும் ஏலதாரர்கள் தங்கள் முதலீடுகளைத் திறம்படத் திட்டமிட வழிவகுக்கும்.

மொத்தம் 1,692.5 கி.மீ நீளமுள்ள அடையாளம் காணப்பட்டுள்ள இந்தத் தேசிய நெடுஞ்சாலைச் சொத்துக்கள், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஒன்பது மாநிலங்களில் பரவியுள்ள நெடுஞ்சாலைப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளன. இந்த நெடுஞ்சாலைச் சொத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, நிலையான போக்குவரத்துத் திறன் மற்றும் வலுவான போக்குவரத்து இணைப்பு முக்கியத்துவம் கொண்ட பொருளாதார மற்றும் தளவாடப் போக்குவரத்து வழித்தடங்களாகத் திகழ்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266193&reg=3&lang=1

 

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266345) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Bengali , English , Urdu , हिन्दी