வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-கொரியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்த மேம்பாடு குறித்த 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் புது தில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 1:07PM by PIB Chennai

கொரியக் குடியரசின் அதிபர் இந்தியாவில் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, 2026 ஏப்ரல் 20 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், கொரிய வர்த்தக அமைச்சர் திரு. யோ ஹான்-கூ இடையே கூட்டுப் பிரகடனம் ஒன்று  கையெழுத்தானது.

இந்தக் கூட்டுப் பிரகடனத்தில், இந்தியா-கொரியா இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துவது என இரு நாடுகளும் உறுதியளித்திருந்த. அதன் தொடர்ச்சியாக, இந்தியா-கொரியா இடையே விரிவான பொருளாதார ஓத்துழைப்பிற்கான 12-வது சுற்று மேம்பாட்டுப் பேச்சுவார்த்தைகள், 2026 மே 25 முதல் 27 வரை புது தில்லியில் நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தைகளுக்கு, மத்திய வர்த்தக வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் திருமதி கபில் சௌத்ரி, கொரியக் குடியரசின் வர்த்தகம், தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் வர்த்தக ஒப்பந்தக் கொள்கைக்கான தலைமை இயக்குநர் திரு. பார்க் கியூன்-ஓ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 2010-ம் ஆண்டில், இந்தியா-கொரியா இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266170&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266268) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali