சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய சுகாதார கணக்கு மதிப்பீடுகள் 2022-23-ஐ மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
27 MAY 2026 3:18PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2022-23-ம் ஆண்டிற்கான பத்தாவது தேசிய சுகாதார கணக்கு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரச் செலவினங்களின் பங்கு 2013-14-ம் ஆண்டில் 1.15 சதவீதமாக இருந்தது, 2022-23-ல் 1.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய கணக்கீட்டின்படி இது 1.48 சதவீதமாகும். அதேபோல், அரசின் மொத்த பொதுச் செலவினங்களில் சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு 3.78 சதவீதத்திலிருந்து 4.89 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனிநபர் சுகாதாரச் செலவு 2.7 மடங்கு அதிகரித்து, 1,042 ரூபாயிலிருந்து 2,786 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால், பொதுமக்கள் மருத்துவத்திற்கு செலவு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளது. மொத்த சுகாதாரச் செலவில் மக்களின் சொந்த கைச்செலவு 64.2 சதவீதத்திலிருந்து 43.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும், ஆயுஷ்மான் பாரத் போன்ற விரிவான காப்பீட்டுத் திட்டங்களால் சமூகப் பாதுகாப்புச் செலவினங்களின் பங்கு 6 சதவீதத்திலிருந்து 9.9 சதவீதமாகவும், தனியார் மருத்துவக் காப்பீட்டுப் பங்கு 3.4 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான, குறைந்த விலையிலான, உள்ளடக்கிய சுகாதாரக் கட்டமைப்பை நோக்கிய அரசின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265816®=3&lang=1
***
TV/PD/SE
(रिलीज़ आईडी: 2266088)
आगंतुक पटल : 61