விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நடப்பாண்டு காரீஃப் பருவத்திற்கான தேசிய வேளாண் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 5:18PM by PIB Chennai

நடப்பாண்டு காரீஃப் பருவத்திற்கான இரண்டு நாள் தேசிய வேளாண் மாநாடு புதுதில்லியில் உள்ள என்ஏஎஸ்சி வளாகத்தில் மே 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைக்கிறார். இதில் மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

நாட்டின் விவசாயத் துறையின் எதிர்கால திட்டங்கள், முன்னுரிமைகளை நிர்ணயிப்பதற்கான முக்கிய தளமாக இந்த மாநாடு விளங்குகிறது. இதில் வேளாண் உற்பத்தித் திறன், பருவநிலை மாற்றத்தைத் எதிர்கொள்ளும் வகையிலான விவசாய நடைமுறைகள், இயற்கை விவசாயம், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், வேளாண் நிதி, இடர் மேலாண்மை குறித்து மாநிலங்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும்.

விவசாயிகள் நலன் மற்றும் நிலையான விவசாயத்தை மையமாகக் கொண்டு, தற்சார்பு, பயிர் பன்முகத்தன்மை, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெறும். இம்மாநாடு மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, காரீஃப் பருவத்திற்கான உத்திகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265928&reg=3&lang=1  

***

TV/PD/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266038) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada