நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொது விநியோக முறையில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருவாய் கையாளுதலுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இரண்டு அம்சங்களை ஒருங்கிணைத்துத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 2:57PM by PIB Chennai

பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில்மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும். 

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயானமாநிலங்களுக்குள்ளான உணவு தானியப் போக்குவரத்துகையாளுதல்நியாயவிலைக் கடை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றால் ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்வதற்கான மத்திய உதவியின் விதிமுறைகளைத் திருத்தவும்தற்போதுள்ள மத்திய உதவி நிதி முறையைத் தொடரவும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

சார்தக்-பிடிஎஸ் திட்டம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளது:

 (அ) மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகையாளுதல், மற்றும் நியாயவிலைக் கடை விற்பனை முகவர்களின் லாப வரம்பு ஆகியவற்றிற்கு உறுதியான நிதி ஆதரவை வழங்குதல்.

 (ஆ) கடைக்கோடிப் பகுதிக்கு சேவை வழங்கலை உறுதிசெய்துகசிவுகளைக் குறைத்துதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் உணவுப் பாதுகாப்பிற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஓர் ஒருங்கிணைந்தகுடிமக்களை மையமாகக் கொண்ட பொது விநியோகக் கட்டமைப்பை உருவாக்குதல். இந்த ஒருங்கிணைந்த திட்டம் 31.03.2031 வரை செயல்படும்.

பொது விநியோகச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மைபாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காகநிகழ்நேரக் கண்காணிப்புக்கான தரப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள்ஒருங்கிணைக்கப்பட்ட தரவுத்தளங்கள்செயற்கை நுண்ணறிவு சார்ந்த குறைதீர்ப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்புகள்தரவு சார்ந்த மேற்பார்வைக்கான மாநிலக் கட்டுப்பாட்டு மையங்கள்ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நடைமுறைக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம்செயற்கை நுண்ணறிவு எந்திரக் கற்றல் இயற்கை மொழி செயலாக்கம்பிளாக்செயின் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திபொது விநியோகச் செயல்பாடுகளை நவீனமாக்கவும்ஒருங்கிணைக்கவும் சார்தக்-பிடிஎஸ் திட்டம் முற்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265788&reg=3&lang=1

***

SS/SMB/SE

 


(வெளியீட்டு அடையாள எண்: 2266006) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Kannada , Malayalam