நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவின் அகர்தலாவில் நிதிச் சேவைகள் துறை சார்பில் கடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAY 2026 4:01PM by PIB Chennai

திரிபுராவின் அகர்தலாவில் நேற்று (26.05.2026), நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு எம் நாகராஜு தலைமையில் கடன் வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரிபுரா அரசின் தலைமைச் செயலாளர் திரு ஜிதேந்திர குமார் சின்ஹா பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் போதுபல்வேறு வங்கிகளின் மூலம்   10,162 பயனாளிகளுக்கு ரூ  419.11 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. நபார்டுசிட்பி வங்கிகளும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல்கள்கடன் விநியோகக் காசோலைகளை வழங்கின. பஞ்சாப் நேஷனல் வங்கியூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றின் வழங்கப்பட்ட பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ் ஆம்புலன்ஸ்கள் இந்நிகழ்ச்சியின் போது கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாமருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகத் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ  36.28 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265848&reg=3&lang=1

(Release ID : 2265848) 

***

SS/PLM/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266003) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी