நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
இணையவழியில் ஆபத்தான, வெடிக்கும் தன்மையுடைய பொருட்களின் விற்பனையைத் தடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 1:24PM by PIB Chennai
நுகர்வோர் பாதுகாப்பு, பொறுப்பான இணைய-வணிக நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் தளங்களில் அங்கீகாரமின்றி ஆபத்தான இரசாயனங்கள், வெடிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கும், விளம்பரப்படுத்தப்படுவதற்கும் எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் அறிமுகப்படுத்தியுள்ளது. உரிய பாதுகாப்பும் சரிபார்ப்பு வழிமுறைகளும் இல்லாமல் ஆபத்தான பொருட்கள் இணையவழியில் விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள், நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, அமோனியம் நைட்ரேட், பிஇடிஎன், துப்பாக்கிகளுக்கான வெடிமருந்து, பிக்ரிக் அமிலம் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களைத் தங்கள் இணையதளங்களில் பட்டியலிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக இந்தியா மார்ட், ஜஸ்ட் டயல், சிக்மா-ஆல்ட்ரிச் இந்தியா, டயல்4டிரேடு, எக்ஸ்போர்ட்டர்ஸ் இந்தியா போன்ற நாட்டின் முக்கிய இணைய-வணிக தளங்களுக்கு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கிய சட்டவிரோத விற்பனையாளர்களின் முழு விவரங்களும் பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பிற்கு (பெஸோ) அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காகப் பகிரப்பட்டுள்ளன.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (சிசிபிஏ) இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முன்னணி இணைய வணிக நிறுவனங்கள் ஆபத்தான இரசாயனங்கள், வெடிபொருட்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்களைத் தங்களது இணையதளப் பக்கங்களில் இருந்து தற்பொழுது உடனடியாக நீக்கத், தொடங்கியுள்ளன. டிஜிட்டல் சந்தைகளில் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், சட்டவிரோதப் பொருட்களின் புழக்கத்தைத் தடுப்பதிலும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265762®=3&lang=1
***
SS/PD/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265879)
வருகையாளர் எண்ணிக்கை : 7