கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் துறையை மேம்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 9:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியாவின் கடல்சார் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான விரிவான சீர்திருத்த வழிகாட்டி வரைபடம் குறித்து மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகத்தை வலுப்படுத்துதல், எளிதாக வணிகம் செய்தல், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, குறைகளைத் தீர்ப்பதற்கான காலவரையறை கொண்ட வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த ஆய்வில், கடந்த 12 ஆண்டுகளில் கடல்சார் துறையில் ஏற்பட்டுள்ள முன்னோடி மாற்றங்களைக் கொண்டாடும் வகையில், நாடு தழுவிய அளவில்கடல்சார் சீர்திருத்த திருவிழா’  கொண்டாடப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் புகார்களைக் காலவரையறைக்குள் தீர்க்க பிரத்யேகக் கண்காணிப்புக் குழு அமைக்கவும், கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் கீழ் அனைத்து கடல்சார் சேவைகள், குறைதீர்ப்புகளை ஒரே இடத்தில் பெற ஏதுவாக ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம், மொபைல் செயலியை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு சார்ந்த நிர்வாகம் ஊக்குவிக்கப்படுவதுடன், பிரதமரின் சமீபத்திய 5 நாடுகள் பயணத்தின் போது எட்டப்பட்ட கடல்சார் ஒப்பந்தங்களை விரைவுபடுத்தவும் இக்கூட்டத்தில் விரிவான முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265187&reg=3&lang=1

 

 

***

(Release ID: 2265187)

SS/EA /KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265856) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi