அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய அறிவியல் தகவல் தொடர்பு & கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 9:43PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய அறிவியல் தகவல் தொடர்பு & கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம் இடையே 2026 மே 25 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அறிவியல் தகவல் தொடர்பு, மக்கள் பங்களிப்பு, அறிவியல்-தொழில்நுட்பக் கொள்கை ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சித் திட்டங்களை நடத்துதல் ஆகியவற்றையும் இக்கூட்டாண்மை ஊக்குவிக்கும்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சைலேஷ் நாயக், அறிவியல் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்கும், கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துவதற்கும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். சிஎஸ்ஐஆர்- தேசிய அறிவியல் தகவல் தொடர்பு & கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கீதா வாணி ராயசம் பேசுகையில், அனைவரையும் உள்ளடக்கிய அறிவியல் தகவல் தொடர்பின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் ஈடுபாட்டை வளர்க்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து விளக்கினார். இந்திய மொழிகளில் தகவல் தொடர்பை மேற்கொள்ளும்போது செயற்கை நுண்ணறிவை நெறிமுறைகளுடன் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, "டிஜிட்டல் யுகத்தில் அனைவரையும் உள்ளடக்கிய அறிவியல் தகவல் தொடர்பு: முன்னுரிமைகள், நடைமுறைகள், கொள்கைகள்" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இரு நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அறிவியல் மீதான நம்பிக்கையை ஊக்குவித்தல், அறிவியல் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், தவறான தகவல்களைத் திறம்படக் கையாளுதல், பள்ளிகளில் அறிவியல் தகவல் தொடர்பை வலுப்படுத்துதல், மக்களிடையே அறிவியல் திட்டங்களைப் பிரபலப்படுத்துதல், விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பரிந்துரைகள் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265195®=3&lang=1
***
(Release ID: 2265195)
SS/EA /KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265853)
வருகையாளர் எண்ணிக்கை : 14