அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புத்தாக்க மையங்களை விரிவாக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் மேகாலயா அமைச்சர் திரு அலெக்சாண்டர் லாலு ஹெக் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 7:10PM by PIB Chennai
மேகாலயா மாநில அமைச்சரும், மாநில திட்டப் பொறுப்புத் தலைவருமான திரு அலெக்சாண்டர் லாலு ஹெக், மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை புதுதில்லியில் மே 25, 2026 அன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கான அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையால் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் புத்தாக்க மையங்களை வடகிழக்கு மாநிலங்களில் விரிவாக்கம் செய்வது குறித்து இருவரும் விவாதித்தனர். தொலைதூரப் பழங்குடியின பகுதிகளுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் பலன்கள் சென்றடைவதை அரசு உறுதி செய்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நாடு முழுவதும் இதுவரை 53 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265093®=3&lang=1
***
(Release ID: 2265093)
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265833)
வருகையாளர் எண்ணிக்கை : 14