PIB Backgrounder
மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 12:10PM by PIB Chennai
இந்தியா-நார்டிக் ஒத்துழைப்பின் மூலம், இந்தியா - நார்டிக் நாடுகளிடையேயான கூட்டமைப்பு ஒரு புதிய வடிவம் எடுக்கிறது. முதல் இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு, 2018-ல் நடைபெற்றது. இது, ஒரு நீண்டகால உத்திசார் நட்புறவை உருவாக்கும் நோக்கில், உயர்நிலை ஈடுபாட்டின் ஒரு தொடக்கமாக அமைந்தது. மே 19, 2026 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும், ஓஸ்லாவில் நடைபெற்ற மூன்றாவது நார்டிக் உச்சிமாநாட்டில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தை, இந்தியா-நார்டிக் நாடுகளிடையே, பசுமைத் தொழில்நுட்பம், புத்தாக்க உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவியது. இருதரப்பு வர்த்தகம், முதலீடு சார்ந்த பரிவர்த்தனைகளை வலுப்படுத்துவதுடன், இந்த உச்சிமாநாடு பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்க்கான நடவடிக்கை, ஸ்டெம் ஒத்துழைப்பு, கடல்சார் பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆர்க்டிக் செயல்பாடு போன்ற முன் முயற்சிகளை மேற்கொள்ள வகை செய்தது.
இந்தியா - நார்டிக் நாடுகள், 2018-ல் நடைபெற்ற, முதலாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் போது, பன்முக ஒத்துழைப்பிற்கான நடவடிக்கைகளைத் தொடங்கின. இந்த ஒத்துழைப்பு புத்தாக்கம், பசுமைத் தொழில்நுட்பங்கள், தூய்மை எரிசக்தி, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன், நிலையான வளர்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும், செயல்திறன், திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவதையும், புத்தாக்கச் சூழலமைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை போன்ற முயற்சிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், இருதரப்பு நிபுணத்துவம், தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் பயன்படுத்திக் கொள்ள வகை செய்கிறது. 2026 மே 19 அன்று ஓஸ்லோவில் நடைபெற்ற, மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு, இந்த உத்திசார் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்க்கு உதவுகிறது. இந்த உச்சிமாநாடு, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் புத்தாக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவதற்கான சூழலை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஸ்டெம் ஆராய்ச்சி, மீள்திறன் கொண்ட விநியோகச் நடைமுறைகள், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது என தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். பொருளாதார ஒத்துழைப்பைத் தவிர, நார்டிக் நாடுகளுடன் இந்தியா தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
நார்டிக் நாடுகளுடனான ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆர்க்டி பிராந்தியத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், குறிப்பாக, ஆர்க்டிக் பிரதேசத்தில் பனி உருகுவது, பருவமழை உட்பட வானிலை, மழைப்பொழிவு போன்ற இயற்கை சூழல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய மாற்றங்கள், இந்தியாவின் பொருளாதாரம், உணவு, நீர் பாதுகாப்பிற்க்கும், 1300-க்கும் மேற்பட்ட தீவுப் பிரதேசங்கள், கடல்சார் பகுதிகளின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
'இந்தியாவும், ஆர்க்டிக் பிரதேசமும்: நீடித்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை உருவாக்குதல்' என்ற தலைப்பில், இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை, ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி, ஒத்துழைப்பை வலுப்படுத்துதல். பருவநிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், மனிதவள மேம்பாடு, போக்குவரத்து, பிற இணைப்பு வசதிகள், நிர்வாகம், சர்வதேச ஒத்துழைப்பு, ஆர்க்டிக் பிரதேசத்தில் தேசிய செயல்திறனை மேம்படுத்துதல் போன்றவையாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.inPressReleasePage.aspxPRID=2265299®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265683)
வருகையாளர் எண்ணிக்கை : 7