மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அடிக்கல் நாட்டி, முடிவற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 4:05PM by PIB Chennai
மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் ரூ.32.15 கோடி மதிப்பிலான மீன்வளத் திட்டங்களுக்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார். நடப்பாண்டு வடகிழக்குப் பிராந்தியத்திற்கான ஆய்வுக் கூட்டத்திற்கு இடையே அவர் இதை தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், வடகிழக்குப் பிராந்தியத்தில் தற்சார்பு நீடித்த மீன்வளர்ப்புத் துறையை வலுப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறினார். மீன்வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றம் கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
வடகிழக்குப் பிராந்தியத்தில் மீன்வளர்ப்பில் உள்ள பெரும் சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்ட அவர், வண்ண மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதற்காக மாநில அரசுகளும் அத்துறையில் தொடர்புடையவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265409®=3&lang=1
***
TV/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265680)
வருகையாளர் எண்ணிக்கை : 5