அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய அறிவியல் வளர்ச்சி நிறுவனத்தின் 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 5:16PM by PIB Chennai
ராமன் விளைவு கண்டறியப்பட்டு அதன் மூலம் அறிவியலில் இந்தியாவுக்கான முதலாவது நோபல் பரிசு கிடைக்கக் காரணமான இந்திய அறிவியல் வளர்ச்சி நிறுவனத்தின் 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார்.
கொல்கத்தாவில் உள்ள இந்நிறுவனத்தில் தான் சர் சி வி ராமன் "ராமன் விளைவை" கண்டறிந்ததன் மூலம் இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதலாவது நோபல் பரிசு கிடைத்தது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் சின்னமாகவும் சுதந்திரத்திற்கு பிந்தைய அறிவியல் எழுச்சியின் அடையாளமாகவும் இந்நிறுவனம் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிறுவனத்தின் பயணம் 3 நூற்றாண்டுகளில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265476®=3&lang=1
***
TV/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265644)
வருகையாளர் எண்ணிக்கை : 12