பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேட் தேர்வு மதிப்பெண் மூலம் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் இணைய வாய்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 26 MAY 2026 4:07PM by PIB Chennai

தொழில்நுட்பப் பிரிவில் (அதிகாரிகள் நிலை) இணைவதற்கான ஒரு புதிய திட்டத்தை இந்திய விமானப்படை அறிமுகப்படுத்தியுள்ளதுஇத்திட்டத்தின்படி, தகுதியுடையவர்கள் தங்களுடைய பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வானகேட்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்

இந்தப் புதிய முன்முயற்சியின் கீழ் உரிய கேட் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் விமானப்படைத் தேர்வு  வாரியங்களில் நடைபெறும் தேர்வுக்காக நேரடியாக தகுதி பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் விமானப்படை, பொது நுழைவுத் தேர்வு போன்ற முதல் நிலை எழுத்துத் தேர்விலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். கேட் மதிப்பெண் திட்டம் தொழில்நுட்பப் பிரிவில் சேர்வதற்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளதுதொழில்நுட்பப் பிரிவு உட்பட  இந்திய விமானப்படையின் அனைத்துப் பிரிவுகளிலும் சேர்வதற்கான நிலையான நுழைவுத் தேர்வாக விமானப்படை பொது நுழைவுத் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும்.

இதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடியகேட்பாடப்பிரிவுகளின் பட்டியலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இதனை https:\\www.afcat.edcil.co.i என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265411&reg=3&lang=1  

***

TV/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2265554) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu