நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"பருத்தியிலிருந்து இழை, தொழிற்சாலை, ஃபேஷன் மற்றும் வெளிநாட்டு சந்தைகள்" வரை ஜவுளி மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 6:21PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இன்று மும்பையில் நடைபெற்ற டெக்ஸ்ப்ரோசில் ஏற்றுமதி விருதுகள் 2023–24 விழாவிற்குத் தலைமை தாங்கினார். இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (டெக்ஸ்ப்ரோசில்), இந்தியாவின் பருத்தி ஜவுளி ஏற்றுமதித் துறையில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில், இந்தியாவின் ஏற்றுமதிச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச வர்த்தகத்திற்கான மேம்பட்ட சான்றிதழ் திட்டத்தையும் (ACPIT) மத்திய நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், வலுவான மற்றும் தடையற்ற பருத்தி நூல் சூழலியலை உறுதி செய்வதற்காக, "பருத்தியிலிருந்து இழை, தொழிற்சாலை, ஃபேஷன் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் வரை" ஒட்டுமொத்த ஜவுளி மதிப்புச் சங்கிலியையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 2047-ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கு, 2030-ஆம் ஆண்டுக்குள் ஜவுளி ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலரையும், ஜவுளி உற்பத்தியில் 250 பில்லியன் அமெரிக்க டாலரையும் எட்டுவது அவசியம் என்றும் அமைச்சர்  குறிப்பிட்டார். ஜவுளித் துறையில் உலகளாவிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை இந்தியா துரிதப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265050&reg=3&lang=1 

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265241) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi