சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆப்பிரிக்காவில் எபோலா பாதிப்பு அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 8:24PM by PIB Chennai

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே.பி. நட்டா இன்று விரிவான ஆய்வு நடத்தினார். உலக சுகாதார அமைப்பு இந்த எபோலா பரவலை சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெற்றது. இதுவரை இந்தியாவில் 'புண்டிபுகியோ' (Bundibugyo) வகை எபோலா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாதிப்பைக் கண்டறிதல், பரிசோதனை செய்தல், தீவிரமாகக் கண்காணிப்பதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சகச் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் தீவிர மருத்துவப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

பரிசோதனை, தனிமைப்படுத்துதல், மருத்துவ மேலாண்மை மற்றும் தொற்று தடுப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் பொதுவான செயல் முறைகள்  அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறியுடன் வரும் சர்வதேசப் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க விமான நிலைய சுகாதார அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265153&reg=3&lang=1   

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265237) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Odia , Telugu