தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் ரூ.25,000 கோடியாக உயர்வு: மத்திய இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி தகவல்

प्रविष्टि तिथि: 25 MAY 2026 7:14PM by PIB Chennai

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.21,000 கோடியிலிருந்து ரூ.25,000 கோடியாக ஆரோக்கியமான முறையில் உயர்ந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சரிவிலிருந்து மீண்டு வரும் பொதுத்துறை நிறுவனமாக உருவெடுத்துள்ள பிஎஸ்என்எல், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது.

பணி கலாச்சாரம், அலைபேசி கோபுரங்களின் நிலை, காலாவதியான உள்கட்டமைப்புகளைச் சீரமைத்ததே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனியார் துறைக்கு இணையான ஒழுங்குமுறையுடன் இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக, உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான 4ஜி சேவை தற்போது நாட்டின் மிகவும் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது. இந்த இணைப்பு வசதி இடதுசாரி தீவிரவாதப் பகுதிகளில் தீவிரவாதத்தைக் குறைக்கவும், அங்கு அரசின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கவும் பெரிதும் உதவுகிறது.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அதிவேக ஃபைபர் இணைப்பை வழங்க அரசு ரூ.1,40,000 கோடி முதலீடு செய்து வருகிறது. முதற்கட்டமாக 1.5 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இந்த இணைப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்காகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை 'நம்பிக்கையான, பெருமைமிக்க, லாபகரமான' பொதுத்துறை நிறுவனமாக மாற்றுவதே தங்களின் தொலைநோக்கு பார்வை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265097&reg=3&lang=1    

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2265234) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu_Vw