பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மே 28 அன்று நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 5:00PM by PIB Chennai

கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமி,வரும் மே 28, 2026 அன்று 2026-ன் வசந்தகால பயிற்சி நிறைவு அணிவகுப்பை நடத்த விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இவ்விழாவில், தெற்கு கடற்படை பிரிவின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ள இளம் கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையில் அதிகாரிகளாகப் பொறுப்பேற்க உள்ளனர.

இராணுவத்தின் அடையாளமாகத் திகழும் இந்த கம்பீரமான அணிவகுப்பில், நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ள இளம் கடற்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த அணிவகுப்பில் இந்திய வீரர்களுடன் இணைந்து, இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான செஷெல்ஸ், தான்சானியா, வியட்நாம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பயிற்சிப் பிரிவினரும் பங்கேற்பது சர்வதேச கடல்சார் கூட்டுறவை வலுப்படுத்தும் இந்தியாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

பாதுகாப்புப் படை மூத்த அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில், சிறந்த வீரர்களுக்குப் பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்கள் அதிகாரப்பூர்வ ராணுவ அதிகாரிகளாக மாறும் 'ஸ்ட்ரைப்ஸ் அணிவிக்கும்' பாரம்பரிய நிகழ்வும் நடைபெறும். உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த விழாவைக் காணும் வகையில், இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ முகநூல் மற்றும் யூடியூப் பக்கங்களில் இது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265068&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265199) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English