இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இம்பாலில் உள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 5:34PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்‌ஷா கட்சே, மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகக் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தார். நாட்டின் முதன்மையான இந்த விளையாட்டு கல்வி நிறுவனத்தில் பயிலும் விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகளுடன் அவர் விரிவாகக் கலந்துரையாடினார். முன்னதாக, இன்று காலை நடைபெற்ற உடற்தகுதிப் பயிற்சியிலும் அவர் விளையாட்டு வீரர்களுடன் இணைந்து பங்கேற்றார்.

இந்நிகழ்வின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பு, கல்வி, ஆராய்ச்சிப் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். விளையாட்டு அறிவியல், நவீன ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகளின் மூலம் இந்தியாவின் விளையாட்டுத் துறை எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தத் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அடையாளமாக திகழும் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இம்பாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணயத்தின் தேசிய சிறப்பு மையத்திற்கு சென்ற அமைச்சர், அங்குள்ள விளையாட்டு அறிவியல் வசதிகள், உடலியல், ஊட்டச்சத்து, பிசியோதெரபி பிரிவுகளை ஆய்வு செய்தார். வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் இத்தகைய மையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265015&reg=3&lang=1   

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265135) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati