சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் மிகப்பெரிய உயிரி மருத்துவ புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்ற நிகழ்வை ஐசிஎம்ஆர் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2026 4:57PM by PIB Chennai

மித்ரா மருத்துவ புதுமைக் கண்டுபிடிப்புகள் உரிமம்: புதுமைக் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து தொழில்துறைக்கு இணைந்து என்ற   நாட்டின் மிகப்பெரிய உயிரி மருத்துவ புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்ற நிகழ்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் புதுதில்லியில் உள்ள மானக்ஷா மையத்தில் நடத்தியது.

இதை மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் கண்பத் ராவ் ஜாதவ், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் கோபர்தன் தாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு ஜாதவ்இம்முயற்சி, இந்திய அறிவியலை தொழில்துறையுடன் இணைப்பதில் ஒரு உறுதியான நடவடிக்கை என்று தெரிவித்தார். இதன்மூலம், நமது ஆய்வகங்களில் உருவாக்கப்படும் புதுமைக் கண்டுபிடிப்புகள், பொது சுகாதாரத்தை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியாவை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களாக மாற்றுவதை உறுதி செய்கிறது என்று கூறினார்.

.சி.எம்.ஆர் போன்ற நிறுவனங்கள் மற்றும் வலுவான தொழில்துறை கூட்டாண்மைகளின் உதவியுடன், இந்தியா சுகாதாரத் தொழில்நுட்பங்களின் நுகர்வோர் என்ற நிலையிலிருந்து, கட்டணக் குறைவு மற்றும் புதுமையான சுகாதாரத் தீர்வுகளுக்கான உலகளாவிய ஆதாரமாக மாறி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய டாக்டர் கோபர்தன் தாஸ், சுகாதாரத் தொழில்நுட்பங்களில் உலகளாவிய தலைமைத்துவமாக உருவெடுப்பதற்கான அறிவியல் திறனும் புதுமைக் கண்டுபிடிப்பு சூழலும் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்தார். மருத்துவப் புதுமைக் கண்டுபிடிப்பு காப்புரிமைகளான மித்ரா, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை சாத்தியமாக்குவதிலும், உள்நாட்டுப் புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆய்வகங்களிலிருந்து சமூகத்திற்குச் செல்லும் பயணத்தை விரைவுபடுத்துவதிலும் முக்கியப் பங்காற்றும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264989&reg=3&lang=1

***

TV/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2265120) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी