புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய அரசின் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தமது பைமனா தளத்தின் வாயிலாக, மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இது பல்வேறு அமைச்சகங்கள் முழுவதும் மேம்பட்ட கண்காணிப்பு, குறித்த நேர மதிப்பாய்வுகள், தரவு சார்ந்த முடிவெடுத்தல் ஆகியவற்றை சாத்தியமாக்குகிறது. 2026 ஏப்ரல் நிலவரப்படி, ரூ.42.78 லட்சம் கோடி மதிப்பிலான 1,981 உள்கட்டமைப்புத் திட்டங்களை இந்தத்தளம் கண்காணித்து வருகிறது.
2026 ஏப்ரல் மாத நிலவரப்படி, 17 மத்திய அமைச்சகங்கள் / துறைகளில் மொத்தம் ரூ.42.78 லட்சம் கோடி திருத்தப்பட்ட மதிப்பீட்டுச் செலவைக் கொண்ட 1,981 உள்கட்டமைப்புத் திட்டங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு ரூ.20.36 லட்சம் கோடியாக உள்ளது. இது திருத்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுச் செலவில் சுமார் 47.59 சதவீதமாகும். இது திட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தை குறிப்பிடுகிறது.
இத்திட்டங்களில் கணிசமான பகுதியானது மேம்பட்ட நிலையில் உள்ளது. அதாவது, 801 திட்டங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன. அதேபோல், 277 திட்டங்களில் 80 சதவீதம் நிதிசார் அளவில் நிறைவடைந்துள்ளன.
போக்குவரத்து, சரக்கு போக்குவரத்துத் துறை, அதிக எண்ணிக்கையிலான (1459) செயல்பாட்டில் உள்ள திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்துறையின் திருத்தப்பட்ட மதிப்பீட்டுச் செலவான ரூ.23.34 லட்சம் கோடி, போக்குவரத்து வசதியை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு அளிக்கப்படும் முன்னுரிமையை எடுத்துக் காட்டுகிறது.
தற்போது நடைபெற்று வரும் 1,981 உள்கட்டமைப்புத் திட்டங்களில், ரூ.31.63 லட்சம் கோடி மதிப்பிலான 814 பெருந்திட்டங்களும் ரூ.5.49 லட்சம் கோடி மதிப்பிலான 1,167 முக்கியத் திட்டங்களும அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264967®=3&lang=1
***
SS/IR/LDN/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2265041)
வருகையாளர் எண்ணிக்கை : 14