வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - கனடா பொருளாதார ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கனடா பயணம்
प्रविष्टि तिथि:
23 MAY 2026 7:45PM by PIB Chennai
இந்தியா மற்றும் கனடா இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மே 25 முதல் 27 வரை கனடாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இப்பயணத்தில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மற்றும் அந்நாட்டு அமைச்சர்களைத் திரு. பியூஷ் கோயல் சந்தித்துப் பேசுகிறார். இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளன. 'வளர்ச்சியடைந்த இந்தியா' தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஆற்றல், அணுசக்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துவதுடன், 2.8 மில்லியன் இந்திய வம்சாவளியினரின் உறவை மேம்படுத்துவதும் இப்பயணத்தின் நோக்கமாகும்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மேற்கொள்ளும் இப்பயணம், இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய துறைகளில் கூட்டுறவை ஆராயவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264617®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2264779)
आगंतुक पटल : 47