குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் 'பிஎம் விஸ்வகர்மா' திட்டம் அமல்

प्रविष्टि तिथि: 22 MAY 2026 8:46PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் பாரம்பரிய கைவினைஞர்களை மேம்படுத்தும் 'பிஎம் விஸ்வகர்மா' திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கூடுதல் செயலாளர் டாக்டர் ரஜனீஷ், மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வாலைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்திற்காக மாநில மற்றும் மாவட்டக் குழுக்களை அமைக்க மேற்கு வங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தற்போது அம்மாநிலத்தில் 7.79 லட்சம் கைவினைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நவீன கருவிகள், திறன் மேம்பாடு மற்றும் நிதியுதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கொல்கத்தாவில் உள்ள எம்எஸ்எம்இ மையத்தில் புதிய 'டிரான்ஸ்ஃபார்மர் சோதனை வசதி' தொடங்கி வைக்கப்பட்டது. இது உள்ளூர் சிறு உற்பத்தியாளர்களுக்குப் பெரிதும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264346&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2264686) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali