மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இந்தியாவின் குளிர்ந்த நீர் மீன் வளர்ப்பு, கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக உருவெடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
23 MAY 2026 5:06PM by PIB Chennai
இந்தியாவின் குளிர்நீர் மீன்வளத் துறை, வாழ்வாதாரங்களை உருவாக்குதல், ஊட்டச்சத்து மேம்பாடு, சூழல் சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் நிலையான மலை வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலம் கடல்சார் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக உருவெடுத்து வருகிறது.
ஒரு காலத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள நீரோடைகளில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த இத்துறை, அறிவியல் பூர்வ பண்ணை வளர்ப்பு மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்பின் ஆதரவுடன் ஒரு நவீன மீன் வளர்ப்புச் சூழலமைப்பாகப் பரிணமித்துள்ளது.
குளிர்நீர் மீன்வளம் என்பது, 5° செல்சியஸ் முதல் 25° செல்சியஸ் வரையிலான வெப்பநிலை, உயரமான மலைப்பகுதிகளில் உள்ள பனி உருகி வரும் ஆறுகள், ஓடைகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ரெயின்போ டிரவுட், கோல்டன் மகாசீர் மற்றும் ஸ்னோ டிரவுட் போன்ற இனங்கள், குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வழிப் பாதைகள், பயோஃப்ளாக் அமைப்புகள் மற்றும் குளிர்ப்பதன வசதிகள் உள்ளிட்ட சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படுகின்றன. டிரவுட் மீன் வளர்ப்பு பொதுவாக 1,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் மகாசீர் மீன் வளர்ப்பு, குறைந்த உயரத்தில் உள்ள மலை பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கான உகந்த சூழல் உள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய பகுதிகளிலும், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் மலை மாவட்டங்களிலும் குளிர்நீர் மீன்வளம் செழித்து வளர்கிறது. இந்தச் சூழல் அமைப்புகள் அனைத்தும் சேர்ந்து 5.33 லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான மலைப்பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இந்தியா 278-க்கும் மேற்பட்ட குளிர்நீர் மீன் இனங்களை அடையாளம் கண்டுள்ளது. இது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான மலை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264535®=3&lang=1
***
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2264682)
आगंतुक पटल : 55