இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
அரசுப் பணிகளில் புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு,19-வது 'வேலைவாய்ப்பு முகாமில்' பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAY 2026 3:36PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 19-வது'வேலைவாய்ப்பு முகாமில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், நாடு முழுவதும், புதிதாகப் பணியில் சேர்ந்துள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அவர் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
நாடு முழுவதும் 47 இடங்களில், ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த 'வேலைவாய்ப்பு முகாம்', வேலைவாய்ப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துவதையும், மக்கள் நலன் சார்ந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் முக்கிய முயற்சியாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிதாகப் பணியில் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இந்திய ரயில்வே, இஸ்ரோ, உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை, உயர்கல்வித் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இணைந்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக, விரிவடைந்து வரும் இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.
புதிதாகப் பணியில் சேர்ந்த இளைஞர்களிடம் உரையாற்றிய பிரதமர், அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிதாகப் பணியில் சேர்ந்த இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகளில் பொறுப்புள்ளவர்களாக உருவெடுத்துள்ளதாகவும், '2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264505®=3&lang=1
***
TV/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2264607)
வருகையாளர் எண்ணிக்கை : 6