ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம் 2.0 குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தேசிய அளவிலான ஆய்வுக் கூட்டம்

प्रविष्टि तिथि: 22 MAY 2026 6:42PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின், குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை, ஜல் ஜீவன் இயக்கம் 2.0 இன் அமலாக்க கட்டமைப்பு மற்றும் கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்து விவாதிக்க நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், யூனியன் பிரதேசங்களில் துணை ஆணையர்களுடன் காணொலி  மூலம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆய்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 759-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய மறுஆய்வுக் கூட்டத்திற்கு குடிநீர் மற்றும் துப்புரவுத் துறைசெயலாளர் திரு அசோக் K.K மீனா தலைமை தாங்கினார். கூடுதல் செயலாளர்  மற்றும் திட்ட இயக்குநர் திரு கமல் கிஷோர் சோன் , தேசிய ஜல் ஜீவன் இயக்க இணை செயலாளர் திருமதி ஐஸ்வர்யா சிங், இணை செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனது தொடக்க உரையில், திரு அசோக் K.K.மீனாஜல் ஜீவன் மிஷன் (ஜே. ஜே. எம்) மற்றும் தூய்மை இந்தியா கிராமிய இயக்கம்  (எஸ். பி. எம்-ஜி) ஆகிய இரண்டும் இப்போது நம்பகமான சேவை வழங்கல், செயல்பாடு, நிலைத்தன்மை மற்றும் சமூக உரிமையை நோக்கி உள்கட்டமைப்பு உருவாக்கத்தைத் தாண்டி கவனம் செலுத்த வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளன என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264288&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2264519) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada