தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா முழுவதும் தொலைதூர பார்சல் விநியோகச் சேவைகளுக்காக அஞ்சல் துறையும் ஃபிளிப்கார்ட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAY 2026 5:42PM by PIB Chennai

இந்தியாவின் மின்வணிக தளவாடச் சூழலமைப்பை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் தொலைதூர விநியோகத் திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் ஃபிளிப்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை தொலைதூர பார்சல் விநியோகச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தபால் துறையின் பார்சல் இயக்குநரகப் பொது மேலாளர் திரு நீரஜ் குமார் ஜா, ஃபிளிப்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் வர்த்தக இயக்குநர் திரு ஹர்விந்தர் கபூர் ஆகியோர், தபால் துறையின் பார்சல் மற்றும் சிசிஎஸ் இயக்குநரகத் தலைமைப் பொது மேலாளர் திரு அத்னான் அகமது, ஃபிளிப்கார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர் (பெருநிறுவன விவகாரங்கள்) திரு திப்பி வங்கனி மற்றும் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், இன்று புது தில்லியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தக் கூட்டாண்மை என்பது, அஞ்சல் துறையின் இணையற்ற அணுகல் மற்றும் நம்பகமான விநியோக வலையமைப்பையும், இந்தியாவின் மின் வணிகத் துறையில் ஃபிளிப்கார்ட்டின் வலுவான இருப்பையும் பயன்படுத்தி, நாடு முழுவதும் திறமையான, நம்பகமான மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட பார்சல் விநியோகத் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அஞ்சல் துறை இந்தியா முழுவதும் ஃபிளிப்கார்ட் சரக்குகளுக்கான தொலைதூர விநியோகச் சேவைகளை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264218&reg=3&lang=1  

***

TV/SMB/SE

 


(வெளியீட்டு அடையாள எண்: 2264389) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी