விவசாயத்துறை அமைச்சகம்
பண்ணை பாதுகாப்புத் திட்டம், 2.712 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளதுஉரங்களை சமச்சீராகப் பயன்படுத்துவது குறித்து 7.17 லட்சம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 4:02PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் கீழ் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், மண் ஆரோக்கியம், சமச்சீரான உரப் பயன்பாடு, நிலையான வேளாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தனது நாடு தழுவிய ‘பண்ணைப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. அறிவியல் பூர்வமான ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கற்பிப்பதற்காக, பல்வேறு தளங்கள் மூலம் நாடு முழுவதும் ஒரு வலுவான அணுகலை இந்தத் திட்டம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 12,979 விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் 7.17 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். திறனை மேம்படுத்தும் நோக்கில், 3,145 பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் 1,11,509 பேர் பங்கேற்றனர். பசுந்தாள் உரம், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை மூலங்கள் குறித்து 7,928 களம் சார்ந்த செயல்விளக்கங்கள் மூலம் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது.
அடித்தளப் பங்கேற்பை உறுதி செய்வதற்காக, பஞ்சாயத்து, மற்றும் மாவட்டப் பஞ்சாயத்து உறுப்பினர்களின் தீவிர ஈடுபாட்டுடன் 4,916 மக்கள் பிரதிநிதி மாநாடுகள் நடத்தப்பட்டன. சமச்சீரான உரப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்க உள்ளீட்டுப் பொருள் விற்பனையாளர்களுடன் 9,609 கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பண்ணைப் பாதுகாப்புத் திட்டம் என்பது மண் பரிசோதனை அடிப்படையிலான ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவிப்பதையும், ரசாயன உரங்கள் மீதான அதீத சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் மண் வளத்தைப் பாதுகாத்து, நீண்டகால வேளாண் நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264122®=3&lang=1
***
SS/SMB/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264303)
வருகையாளர் எண்ணிக்கை : 9