பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய செயலகத்தில் தொடர்ந்து 46-வது மாதமாக மாதாந்தர குறைதீர்ப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAY 2026 2:10PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள், பொது குறைதீர்ப்புத் துறை 2026 ஏப்ரல் மாதத்திற்கான பொது குறை தீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் மாதாந்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பொதுக்குறைகள் குறித்த மனுக்கள் வகைப்படுத்தப்பட்டு எவ்வாறு தீர்வு காணப்படுவது என்பது குறித்த பகுப்பாய்வும் இடம் பெற்றுள்ளது. இது மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடு குறித்து வெளியிடப்படும் 48-வது அறிக்கையாகும்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வாயிலாக 1,88,969 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 2026-ம் ஆண்டின் பொதுக் குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான சராசரி கால அளவு 13 நாட்களாக உள்ளது. பொதுகுறைகளுக்கு தீர்வு காண்பது குறித்த நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்தவும், அதற்கான கால அளவைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் பொதுக் குறைகள் குறித்து இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ள பயனாளர்கள் குறித்த தரவுகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது. இதன்படி இணையதளம் மூலம் மொத்தம் 76,643 புதிய பயனாளர்கள் தங்களது குறைகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் பொதுச் சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்து மாநில வாரியான பகுப்பாய்வுத் தரவுகளையும் இந்த அறிக்கை வழங்குகிறது. பொதுச் சேவைக்கான மைய இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்தத் தளம் இரண்டரை லட்சம் கிராமப்புற தொழில் முனைவோருடன் இணைந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் குறைதீர்ப்பு சேவையை வழங்கி வருகிறது. இத்தகைய பொதுச் சேவை மையங்கள் வாயிலாக மொத்தம் 8,001 குறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய அறிக்கைகள் மூலம் குறைதீர்ப்பு வழிமுறைகளின் செயல்திறன் மேம்படுத்தப்படுவதுடன் குடிமக்களுக்கான திருப்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264048®=3&lang=1
***
SS/SV/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2264296)
வருகையாளர் எண்ணிக்கை : 15