நிர்வாக சீர்திருத்தங்கள், பொதுக் குறைதீர்ப்புத் துறை 2026 ஏப்ரல் மாதத்திற்கான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான குறைதீர்ப்பு, கண்காணிப்பு அமைப்பின் மாதாந்தர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பொதுக் குறைதீர்ப்பு குறித்த வகைப்பாடுகள், பிரிவுகள் குறித்தும் மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் இது தொடர்பான மனுக்களுக்கு எவ்வாறு தீர்வு காண்கின்றன என்பது குறித்தும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.
இதன்படி, 2026 ஏப்ரல் மாதத்தில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான 88,057 பொது குறைதீர்ப்பு வழக்குகள் பெறப்பட்டு அவற்றில் 77,445 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அதிகபட்சமாக 34,959 குறைதீர்ப்பு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அம்மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
பொது குறைத்தீர்ப்பு மற்றும் கண்காணிப்புக்கான இணையதளத்தில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 2,11,701 ஆக உள்ளது. 22 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தலா ஆயிரத்துக்கும் அதிகமான பொது குறைதீர்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பொதுச் சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்ட குறைகள் தொடர்பான மாநிலம் வாரியான பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
சேவோட்டம் திட்டத்தின் கீழ் கடந்த 5 நிதியாண்டுகளில் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டங்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் பயிற்சிப் பெற்ற அதிகாரிகளின் விவரங்கள் குறித்தும் இந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை மொத்தம் 1,159 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு 38,270 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264045®=3&lang=1
***
SS/SV/KPG/SE