ஜல்சக்தி அமைச்சகம்
ஏழாவது தூய்மையான குடிநீர் குறித்த கலந்துரையாடல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:17PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை சார்பில், ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் ஏழாவது பன்மொழி தூய்மையான குடிநீர் குறித்த இணையவழி கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் துறைச் செயலாளர் அசோக் கே கே மீனா தலைமை தாங்கினார்.
கிராமப்புற குடிநீர் விநியோகக் கட்டமைப்புகளைப் பராமரிப்பதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பையும், தார்மீகப் பொறுப்பையும் மீட்டெடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இக்கூட்டத்தில் ராஜஸ்தான், மிசோரம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்து பிரதிநிதிகள், மகளிர் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் பிராந்திய மொழிகளில் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக, மாதாந்திரப் பயனர் கட்டணம் வசூலித்தல், குழாய் கசிவுகளைச் சரிசெய்தல், மழைநீர் சேகரிப்பு, மகளிருக்குத் தரக்கட்டுப்பாட்டுப் பயிற்சி அளித்தல் போன்ற சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கலந்துரையாடலில், கிராமப்புறங்களில் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை நீண்ட காலத்திற்குத் தடையின்றி உறுதி செய்ய, உள்ளூர் மக்களும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263392®=3&lang=1
***
SS/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2264020)
வருகையாளர் எண்ணிக்கை : 9