வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உற்பத்தித்திறன் என்பது மீள்திறன், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதாகும்-மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 21 MAY 2026 8:21PM by PIB Chennai

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் 68-வது நிர்வாகக் குழு கூட்டத்தின் முதல் நாள் அமர்வு, இன்று பாரத மண்டபத்தில் வெற்றிகரமாகத் தொடங்கியது.

இதில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய உற்பத்தித்திறன் அமைப்புகளின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், உற்பத்தித்திறன் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்னிலையில் இக்கூட்டத்தின் தொடக்க அமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றிய அவர், நிர்வாகக் குழுவின் தற்போதைய தலைவராக, தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் மாறிவரும் உலகளாவிய சூழல்கள் ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளை மறுவடிவமைத்து வரும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் மாற்றத்திற்கான காலகட்டத்தில் பங்களிப்பதில், இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறினார். தற்போதைய உற்பத்தித்திறன் என்பது செயல்திறனைக் கடந்து, மீள்திறன், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், 'மேக் இன் இந்தியா', 'ஸ்டார்ட்அப் இந்தியா', 'திறன் இந்தியா', உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்கள், பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம், தேசிய சரக்குப் போக்குவரத்துக்கான  கொள்கை, யுபிஐ, ஆதார் மற்றும் ஓஎன்டிசி போன்ற முன்முயற்சிகளை உற்பத்தித்திறன் சார்ந்த மாற்றத்திற்கான உதாரணங்களாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பின் மூலம் பிராந்திய ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பு மிக்க நடவடிக்கைகளை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263921&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2263942) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Gujarati