இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இந்தியா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பின் கீழ், இந்தூரில் பிரிக்ஸ் இளையோர் மன்றத்தின் தொழில்முனைவுக் பணிக்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது
प्रविष्टि तिथि:
21 MAY 2026 5:27PM by PIB Chennai
பிரிக்ஸ் இளையோர் மன்றத்தின் தொழில்முனைவுக் பணிக்குழு கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே வலுவான தொழில்முனைவு ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு, இரண்டு நாட்கள் நடைபெற்ற அமர்வுகளில், கூட்டு முயற்சிகள் மற்றும் அறிவுசார் பகிர்வு தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.
2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ், மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், அத்துறைக்கான மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொளி வாயிலாக கலந்து கொண்டார். மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, மத்தியப் பிரதேச மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு விஸ்வாஸ் கைலாஷ் சாரங், இளைஞர் விவகாரத் துறைச் செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில், இளைஞர் விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, இளைஞர் விவகாரத் துறை இயக்குநர் டாக்டர் சாரா ஜெயல் சாவ்மி, இளைஞர் விவகாரத் துறை துணைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் கனௌஜியா, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய இளைஞர் விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முழுவதிலும் உள்ள தொழில்முனைவுச் சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவதில், கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "தொழில்முனைவு என்பது ஒரு சிலருக்கான சிறப்புரிமை அல்ல என்றும், புவிசார் இருப்பிடம், பாலினம் அல்லது பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல், ஒவ்வொரு இளைஞரும் அணுகக்கூடிய ஒரு உரிமையாகும்," என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263798®=3&lang=11
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2263933)
आगंतुक पटल : 31