புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை 9 கோடியைக் கடந்து, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாகத் திகழ்கிறது

प्रविष्टि तिथि: 21 MAY 2026 4:00PM by PIB Chennai

வலுவான பொருளாதாரக் குறியீடுகள் கிடைப்பதை உறுதி செய்யும் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், 2025-ம் ஆண்டு முதல், பதிவு செய்யப்படாத வேளாண் சாரா துறைகளின் முக்கிய ஆய்வுகள் குறித்த காலாண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள, ஜனவரி–மார்ச் 2026 கால கட்டத்திற்கான பதிவு செய்யப்படாத துறையில் இயங்கி வரும் நிறுவனங்கள் குறித்த காலாண்டு அறிக்கை, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் குறித்த வருடாந்திர ஆய்வின் ஒரு காலாண்டுப் பதிப்பாகும்.

பதிவு செய்யப்படாத வேளாண் சாரா துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கியப் பங்களிப்பை கொண்டுள்ளது. இவை பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆதாரமாகவும், உள்ளூர் தொழில்முனைவு மற்றும் விநியோகச் சங்கிலிகளின் முக்கிய உந்து சக்தியாகவும் திகழ்கிறது. இந்த முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், தேசிய புள்ளியியல் அலுவலகம், கடந்த 2021–22-ம் ஆண்டில், பதிவு செய்யப்படாத துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இத்துறையில் மேலும் மூன்று வருடாந்திர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவை இத்துறையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான வருடாந்திர விவரங்களை வழங்கியுள்ளன.

மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 9.16 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 16.69% என்ற அளவில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இத்துறையில் வேலைவாய்ப்பு 15 கோடி என்ற அளவைக் கடந்துள்ளது.   பிற சேவைகள் துறை சார்ந்த நடவடிக்கைகளே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இத்துறையில், வேலைவாய்ப்புக்கான வளர்ச்சி விகிதம் 30%-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

பதிவு செய்யப்படாத வேளாண் சாரா துறையில் உள்ள நிறுவனங்களில், 81%, தொழில்சார் நோக்கங்களுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளன.

81% நிறுவனங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.

பெண் பணியாளர்களின் பங்களிப்பு, தொடர்ந்து ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்துறையின் மொத்த வேலைவாய்ப்பில் பெண்கள் 29%  பங்களிப்பைக் கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263720&reg=3&lang=1

***

SS/SV/SE


(रिलीज़ आईडी: 2263892) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada