வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா - அமெரிக்கா பரஸ்பரம் நம்பிக்கையுடன் கூடிய நட்பு நாடுகளாகத் திகழ்கின்றன: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAY 2026 2:05PM by PIB Chennai
புதுமையான தொழில்நுட்பம், பாதுகாப்பு, டிஜிட்டல் தரவு மையங்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா - அமெரிக்கா பரஸ்பரம் இணைந்து செயல்படும் நட்பு நாடுகளாக இருக்கின்றன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார். புது தில்லியில் இன்று நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சபையின் வருடாந்திர தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொருளாதார நலன்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
கடந்த ஆறு மாதங்களில், அமெரிக்கத் தொழில்துறையினரின் முதலீடுகள் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், இதில் அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களின் முக்கிய தரவு மையம் அமைப்பதற்கான முதலீடுகளும் அடங்கும் என்றும் திரு கோயல் கூறினார். உலகளவிலான நிறுவனங்களுக்கு, இந்தியா நம்பகத்தன்மையுடன் கூடிய கட்டமைப்பை வழங்குகிறது என்றும், அளவு, திறமை மற்றும் சந்தை வாய்ப்புகளை சிறந்த முறையில் ஒருங்கிணைக்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியா அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்களுக்குத் தொடர்ந்து மதிப்பளிப்பதுடன், உயர் தரத்திலான வெளியீடுகளை குறித்த நேரத்தில் வழங்கி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். திறன் வாய்ந்த பணியாளர்களை இந்தியா கொண்டுள்ளது என்றும்,140 கோடி மக்களின் தேவைகள் வருவாய் அதிகரிப்பு, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம் ஆகியவற்றின் மூலம், அமெரிக்காவின் புதுமை நடவடிக்கைகளுக்கு இந்தியா வாய்ப்பை வழங்குகிறது என்றும் திரு பியூஸ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263649®=3&lang=1
***
SS/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2263767)
வருகையாளர் எண்ணிக்கை : 9