மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வு (முதல்நிலை) - 2026-ல் அமைக்கப்பட்ட 3 புதிய மையங்களை 23,000-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 11:56AM by PIB Chennai

இந்திய குடிமைப்பணித் தேர்வு (முதல் நிலை) – 2026-க்கான தேர்வு மையங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில், புவனேஸ்வர், கான்பூர், மீரட் ஆகிய இடங்களில் 3 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களின் மூலம் முதல் நிலை தேர்வுக்கான மையங்களின் எண்ணிக்கை 80-லிருந்து 83
ஆக அதிகரித்துள்ளது. இந்தப் புதிய 3 மையங்களில் தேர்வு எழுத சுமார் 23,000 தேர்வர்கள் விண்ணப்பித்ததால் அருகாமையில் உள்ள மையங்களில் அதிக அளவிலான தேர்வர்களின் எண்ணிக்கைக் குறைந்தது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், தேர்வு நடைமுறை தேர்வர்களுக்கு உகந்ததாகவும் அணுகக் கூடியதாகவும், திறன்மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பது தங்களுடைய நோக்கம் என்று தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். புவனேஸ்வரில் அமைக்கப்பட்ட புதிய தேர்வு மையம் மூலம் கட்டாக் மையத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை குறைந்தது. புவனேஸ்வரில் தேர்வு எழுத 10,656 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதே போல் கான்பூர் மையத்தின் மூலம் லக்னோ மையத்தில் நெரிசல் குறைந்தது.  கான்பூர் மையத்தில் 6,938 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மீரட் தேர்வு மையம் மூலம் அருகாமையில் உள்ள தேர்வர்கள் காசியாபாத் மையத்தை சார்ந்திருப்பதை தவிர்க்க முடிந்தது. மீரட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத 5,902 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263588&reg=3&lang=1

***

SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2263765) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Odia