விவசாயத்துறை அமைச்சகம்
கார் காலம் 2026: நாடு முழுவதும் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 6:43PM by PIB Chennai
நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தனது வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமாக நாடு தழுவிய சமச்சீர் உரப் பயன்பாட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் மண் பரிசோதனை அடிப்படையிலான ஊட்டச்சத்து மேலாண்மை, பசுந்தாள் உரம், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, வரும் கார் கால சாகுபடிப் பருவத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, மண்புழு உரம் மற்றும் அறிவியல் ரீதியான இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கினர். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், பயிர்களின் ஊட்டச்சத்துத் திறனை மேம்படுத்துதல், விவசாயிகளின் முதலீட்டுச் செலவைக் குறைத்தல் மற்றும் நீண்ட கால மண் வளத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த ஒருங்கிணைந்த பிரச்சாரம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263372®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2263372
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263491)
வருகையாளர் எண்ணிக்கை : 35