அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 5:29PM by PIB Chennai
அமெரிக்க தூதர் திரு செர்ஜியோ கோர் இன்று (20.05.2026) மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பங்கள், விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் திறன் மேம்பாடு, முதலீடு, அறிவுசார் பரிமாற்றம் மற்றும் தொழில்துறை சார்ந்த கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக அணுசக்தி ஆராய்ச்சித் துறையில் தனியார் துறை பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இது புதிய முதலீட்டு வாய்ப்புகள், தனியார் துறை பங்கேற்பு மற்றும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை, நோய் கண்டறிதல், புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் மரபணு மருத்துவம் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நோய் கண்டறிதல், மரபணு வரிசை முறை தொழில்நுட்பங்கள், அதிவிரைவு பரிசோதனை முறைகள், போன்ற அம்சங்கள் சிகிச்சைக்கான காலத்தை கணிசமாகக் குறைக்கும் என்றும் கூறினார். பாரம்பரிய கலாச்சார அடிப்படையிலான முறைகள் மூலம் சுமார் 48 மணி நேர காலமாகும் செயல்முறைகளை இது விரைவுபடுத்தும் என்று சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு நலன்களை கடைபிடிப்பதோடு அணுசக்தித் துறை மற்றும் அணுசக்தி மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளில் தனியார் பங்கேற்க இந்தியா வாய்ப்பளித்துள்ளதாகக் கூறினார். இந்நடவடிக்கை முன்னதாக பொதுத்துறைக்கு மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறினார்.
கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்க வாய்ப்பளித்துள்ளது பெரும் பயனளித்துள்ளதாகத் தெரிவித்தார். இது நம்பகமான கூட்டாளர்களுடன் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263321®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263385)
வருகையாளர் எண்ணிக்கை : 14